Asian News

Saturday, December 5, 2009

AMITABH HAS TO RE-RECORD SONG FOR PAA |


இந்தி திரையுலகத்தை மட்டுமல்ல, அமிதாப்பை தெரிந்திருக்கும் அத்தனை ரசிகர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்திருக்கிறது பா படம். இந்த படத்தில் தனது மகன் அபிஷேக்கிற்கு மகனாக நடித்திருக்கிறார் அமிதாப். இந்தியில் வெளியான இந்த படம் இப்போது அத்தனை பேரையும் அதிசயப்பட வைத்திருக்கிறது. எட்டு திசைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகிறதாம். டைட்டில் பாடலை அமிதாப்பே 12 வயது பையனின் குரலில் பாடியிருக்கிறார் என்பது இன்னொரு அதிசயம். இந்த பாடலை பாடுவதற்காக சென்னைக்கே வந்து போனாராம் அமிதாப். கடைசியாகத்தான் இந்த டைட்டில் பாடலை படத்தில் சேர்க்க நினைத்தாராம் இளையராஜா. எல்லாவற்றையும் கம்போஸ் செய்தவர், அமிதாப் டிராக் பாடுவதற்காக மும்பைக்கே அனுப்பி வைத்தார் அவரை. ஆனால் இசை மட்டும் போனதே தவிர இளையராஜா போகவில்லை. பாடலும் நினைத்த மாதிரி நிறைவு பெறவில்லை. நான் இளையராஜாவை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சென்னைக்கே போய் அவர் முன்பு இந்த பாடலை பாட விரும்புகிறேன் என்று கூறிய அமிதாப், உடனே சென்னைக்கு வந்துவிட்டார். அரை மணி நேரத்தில் இந்த பாடலை பாடி இளையராஜாவின் திருவாயால் பாராட்டுகளை அள்ளிக் கொண்டாராம். விரைவில் இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்களாம். இந்த டப்பிங் உரிமையை வாங்கியிருப்பவர் நம்ம இசைஞானி இளையராஜாவேதான்!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home